உம்மை நாடி தேடும் மனிதர்

உம்மில் மகிழ்ந்து களிக்கூரட்டும்

உந்தம் மீட்பில் நாட்டம் கொள்வோர்

மன அமைதி இன்று பெறட்டும்

 

மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே

துதியும் கனமும், தூயோனே உமக்கே

 

1.

என் பார்வை சிந்தை எல்லாம்

நீர் காட்டும் பாதையி தான்

என் சொல்லும் செயலும் எல்லாம்

உம் சித்தம் செய்வதில் தான்-   மகிமை

 

2.

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்

என்னைத்திருத்த வேண்டும் தேவா

கருத்தோடு உமது வசனம்

கற்றுத்தந்து நடத்த வேண்டும்  –   மகிமை

 

3.

உந்தம் வேதம் எனது உணவு

நன்றி கீதம் இரவின் கனவு

உந்தன் பாதம் போதும் எனக்கு

அதுதானே அணையா விளக்கு   –   மகிமை

 

4.

ஒரு நாளும் உம்மை மறவேன்

ஒரு போதும் உம்மை பிரியேன்

மறு வாழ்வு தந்த நேசர்

மணவாளன் மடியில் சாய்ந்தேன்  –   மகிமை



ummai nadi thedum manidhar

ummil makiznththu kalikkuraddum

unthdham midbil nadtam kolvor

mana amaithi inru beraddum

 

makimai madsimai, maventhdhan umakke

thuthiyum kanamum, thuyone umakke

 

1.

en barvai sinththai ellam

nir kaddum bathaiyi than

en sollum seyalum ellam

um sithdham seyvathil than-   makimai

 

2.

ummai varuththum vaziyil natanththal

ennaiththiruthdha vendum theva

karuththodu umathu vachanam

karruthdhanththu natathdha vendum  –   makimai

 

3.

unthdham vedham enathu unavu

nanri kidham iravin kanavu

unthdhan badham bothum enakku

athuthane anaiya vilakku   –   makimai

 

4.

oru nalum ummai maraven

oru bothum ummai biriyen

maru vazvu dhanthdha nechar

manavalan madiyil saynththen  –   makimai